ரயிலுடன் மோதிய சொகுசு ஜீப்
கொழும்பு, அவிஸ்ஸாவளை – லியன்வல ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் ரயிலுடன் ஜீப் வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் காரணமாக களனிவெளி மார்க்கத்தில் ரயில் பயணம் பாதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நோக்கி இன்று வியாழக்கிழமை காலை பயணம் செய்த இறுதி அலுவலக ரயிலுடன் இவ்வாறு ஜீப் வாகனம் மோதியதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
விபத்தின் பின்னர் ரயிலின் இயந்திரம் செயற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
