ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி

-பதுளை நிருபர்-

எல்ல நானுஓயா ஒடிசி ரயிலில் மோதுண்டு ஒருவர் இன்று புதன் கிழமை உயிர் இழந்துள்ளார்.

நானுஓயாவில் இருந்து பதுளை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் ஹாலிஎலைக்கும் பதுளைக்கும் இடைப்பட்ட பகுதியில் குறித்த நபர் மோதி உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் 40 வயது மதிக்க தக்கவர் என்பதுடன் சடலம் இது வரையில் அடையாளம் காணப்படவில்லை.

சடலம் தற்போது பதுளை ரயில் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் பதுளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.