
ரயிலில் மோதி முதியவர் உயிரிழப்பு
கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஸ்கிரிய பிரதேசத்தில் ரயிலில் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
75 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாத்தளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மோதியே இவர் உயிரிழந்துள்ளதுடன் உயிரிழந்தவர் தொடர்பான தகவல்கள் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கண்டிப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
