ரயிலில் மோதி ஒருவர் பலி

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று சனிக்கிழமை பிற்பகல் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மருதானையிலிருந்து பெலியத்த நோக்கிப் பயணித்த ரயிலில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தொடர்பில் இது வரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்