ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு.

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை பயணித்த ரயிலில் மோதுண்டே இந்த நபர் உயிரிழந்துள்ளதுடன் அவரது சடலம் அடையாளம் காணப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.