ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு

திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் ரயில் கடவை காவலாளி ஒருவர், ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.

ஜெயபுர பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில், பத்தினி புறத்தில் உள்ள கடவையை அண்மித்தபோது நித்திரை கொண்டிருந்த காவலாளி திடீரென கண்விழித்து, வேகமாகச் சென்று கடவையை மூட முயற்சித்த போது, நேற்று சனிக்கிழமை ரயிலில் மோதி அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்