ரயிலில் மோதி ஒருவர் உயரிழப்பு

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வஸ்கடுவ பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வஸ்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

மஹவயிலிருந்து பெலியத்த நோக்கி நேற்று திங்கட்கிழமை பிற்பகல் பயணித்த ரயில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை வடக்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்