கணவருடன் ரயிலில் கொழும்புக்குப் பயணித்த பெண் ஒருவரின் கைப்பையிலிருந்த 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்டுள்ளது.
பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய பெண்ணின் உடமைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தன்று தனது கணவருடன் ரயிலில் கொழும்பு நோக்கி பயணித்தபோது தான் உறங்கி விட்டதாகவும், ரயில் கெக்கிராவ ரயில் நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்றபோது தான் விழித்துப் பார்த்தபோது தனது நகைகள், பணம் காணாமல் போயிருந்ததாகவும் பெண் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார்.
இந்நிலையில் நகைகள் களவாடப்பட்டமை தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்