ரயிலாக மாறும் பேருந்து

ஜப்பானில், பேருந்தையே தேவையான இடங்களில் ரயிலாகவும் பயன்படுத்திவருகின்றார்கள்.

ஜப்பானின், கொச்சியை அண்டை பிரதேசமான டோகுஷிமா மாகாணத்துடன் இணைக்கும் ஆசா கடற்கரை ரயில்வே, உலகின் முதல் “ரயில் பேருந்து” என்ற பெருமையை பெறுகின்றது.

அதாவது இரட்டை முறை வாகனங்கள் எனப்படும் Dual Mode Vehicle இங்கு பயன்படுத்தப்படுகின்றது.

இது சாலையில் பேருந்தாகவும், ரயில் பாதையில் (தண்டவாளத்தில்) ரயிலாகவும் செயல்படுகின்றது. அவை பாதையிலிருந்து இருந்து தண்டவாளத்துக்கு மாறும் பொழுது வெறும் 15 வினாடிகளில் பேருந்திலிருந்து, ரயிலாக மாறி விடுகிறது. இந்த வாகனத்தில் 21 பேர் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அது கடற்கரையோர ரயில் பாதைகளில் ஓடுவதைப் பார்க்கும்போது நிச்சயமாக ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அவா-கைனன் நிலையம் மற்றும் கன்னூரா நிலையம் இரண்டிலும் இந்த DMV சுவிட்ச் முறைகளைக் காணலாம்.