ரத்கம பகுதியில் பஸ் மோதி விபத்து – பாதசாரி உயிரிழப்பு

 

ரத்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்கம சந்திக்கு அருகில், காலியிலிருந்து ஹிக்கடுவை நோக்கிச் சென்ற பஸ் மோதியதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.

காலியிலிருந்து ஹிக்கடுவை நோக்கிச் சென்ற பஸ், நடைபாதையில் சென்று கொண்டிருந்த பெண் பாதசாரி ஒருவர் மீது நேற்று சனிக்கிழமை மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த பெண் காயமடைந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த பெண் பாதசாரி காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

விபத்தில் உயிரிழந்தவர் பூஸ்ஸ பகுதியை சேர்ந்த 77 வயதுடையவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சடலம் காலி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

ரத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.