
ரணில் விக்ரமசிங்கவை வெற்றி பெற வைப்பதற்கான கலந்துரையாடல்
-மூதூர் நிருபர்-
ஜனாதி தேர்தலில் சுயட்சை வேட்பாளராக போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கவை வெற்றி பெற வைப்பதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கலந்துரையாடல் திங்கட்கிழமை இரவு திருகோணமலை-தோப்பூரில் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் தோப்பூர் பிரதேசத்தைச் சேர்ந்த பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இதில் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் ஆரியவதி கலப்பதி,ஐனாதிபதி தேர்தலின் செயற்பாட்டு நடவடிக்கைக்காக கிழக்கு மாகாணத்தின் முஸ்லிம் பிரதேசங்களுக்காக போடப்பட்டுள்ள இணைப்பாளர் ஹஸன் அலல்தீன், தேசிய காங்கிரஸின் தேசிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் வைத்தியர் ஸியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கபை வெற்றி பெற வைப்பதற்கான ஆக்கபூர்வமான கருத்துக்கள்,பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட்டன.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

