ரணில் விக்கிரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்?

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படுவார், என்று சிறைச்சாலை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தினர்.

அவரது உடல்நிலைக்கு சிறைச்சாலை வைத்தியசாலையில் சிறப்பு சிகிச்சை தேவை என்று மருத்துவ மதிப்பீடுகள் சுட்டிக்காட்டியதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று விளக்கமறியலில் வைக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க, பல உடல்நலக் குறைபாடுகளைக் காரணம் காட்டி, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.