ரணில் விக்கிரமசிங்க கைது : பல்கலைக்கழகத்தின் அழைப்பிதழை வெளியிட்டது UNP!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோர் கடந்த 2023 செப்டம்பர் மாதம் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு சென்ற பயணத்திற்காக அரசு நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து குறித்த பல்கலைக்கழகத்தால் அவர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழின் நகலை ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜான் ராஃப்டெரி கையொப்பமிட்ட இந்த அழைப்பிதழ் ஜனாதிபதி விக்ரமசிங்க மற்றும் முதல் பெண்மணிக்கு அனுப்பப்பட்டது
மேலும் செப்டம்பர் 22, 2023 அன்று வோல்வர்ஹாம்டனில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த பட்டமளிப்பு விழா மற்றும் மதிய உணவில் அவர்கள் பங்கேற்றதைக் குறிப்பிடுகிறது.
அவர் அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தவில்லை என்று கட்சி வலியுறுத்தியது, தன் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே மறுத்திருந்ததை கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை குற்றவியல் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டார்
