
ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து சம்மாந்துறையில் பிரச்சாரங்கள் ஆரம்பம்!
-சம்மாந்துறை நிருபர்-
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்து சம்மாந்துறை நகரில் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ் அப்துல் மஜீட் தலைமையில் குறித்த நடவடிக்கை இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றது.
இதன் போது சம்மாந்துறை தினச்சந்தை, நகர வர்த்தக நிலையங்களுக்கு சென்ற ஓய்வு பெற்ற பிரதான பொலிஸ் பரிசோதகர் எம்.எஸ் அப்துல் மஜீட் , ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவினை வழங்குமாறு வர்த்தகர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இதேவேளை குறித்த நடவடிக்கை நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
