ரணிலுடன் சஜித் ஒருபோதும் இணையமாட்டர் : ஊடகங்களுக்கு சஜித் பிரேமதாஸ எச்சரிக்கை

போலி செய்திகளை கட்டமைத்து பரப்பும், ஊடகங்கள் என்று கூறிக்கொள்ளும் பல அமைப்புகள் ஒன்று சேர்ந்து, ரணிலும் சஜித்தும் ஒன்று சேர்வதாக பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்,  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும்,  ஊடகங்களின் இந்த பிரசாரம் உண்மைக்கு புறம்பானது என்றும், ஒருபோதும் ரணிலும் சஜித்தும் இணைய மாட்டார்கள் என்றும், எனவே அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறான அப்பட்டமான பொய்ப் பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டாம்,  என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.