ரணிலின் பயணத்துக்கு நிதியை அங்கீகரித்த சமன் ஏக்கநாயக்க தொடர்பில் விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெளிநாட்டுப் பயணத்துக்கான நிதியை அங்கீகரித்தமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு எதிராக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸ் தலைமையக சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் காலிங்க ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார் .
விசாரணைகள் தொடருந்தும் நடந்து வருவதால், சமன் ஏக்கநாயக்க கைது செய்யப்பட்டுவாரா என்பது தொடர்பில் இன்னும் எதுவும் கூற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் தவறான வழியில் நடந்து கொண்டார் எனவும் அரச அதிகாரிகள் அரசியல்வாதிகளை சரியான திசையில் வழிநடத்த வேண்டும் எனவும் அவர்கள் தமது சொந்த நோக்கங்களுக்காக அரசாங்க நிதியைப் பயன்படுத்த முடியாது எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸும் நேற்றைய தினம் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், இந்தப் பயணத்துக்கான செலவுகளுக்கு முன் அனுமதி பெறப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
