ரணிலின் கைது தொடர்பில் வெளிநாட்டு தூதரகங்களுக்கு அறிவிக்க நடவடிக்கை!
ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் குழு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்குச் சென்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளுக்கு அறியப்படுத்தியுள்ளனர்.
ஜி.எல். பீரிஸ், தலதா அத்துகோரல, அலி சப்ரி உள்ளிட்ட பலர் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஏனைய தூதரகங்களுக்கும் அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
