ரணிலின் உடல்நிலை சீராக இல்லை ?
சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்ந்து சீராக இல்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
விக்ரமசிங்கவை முதலில் மகசின் சிறைச்சாலைக்கு அழைத்து வந்ததாகவும், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரித்ததை அடுத்து வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைத்ததாகவும் சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும், இன்று பிற்பகல் அவரது இரத்த அழுத்தம் மேலும் அதிகரித்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல அரசியல்வாதிகள் இன்று சனிக்கிழமை காலை முன்னாள் ஜனாதிபதியை சந்திக்க வெலிக்கடை சிறைச்சாலை மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.