ரஞ்சன் ஜயலாலின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி கைது

கடுவலை நகர சபைத் தலைவர் ரஞ்சன் ஜயலாலின் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இன்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டத்தரணி ஒருவரைத் திட்டி, அவருக்கு அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாக குறித்த நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் கடுவலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் செல்ல நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.