“ரகசா” இந்த வருடத்தின் மிகப்பெரிய சூறாவளி தாக்கவுள்ளது : ஹாங்காங் மூடப்பட்டுள்ளது
உலகின் மிக சக்திவாய்ந்த வெப்பமண்டல சூறாவளியான “ரகசா”வை எச்சரிக்கையை தொடர்ந்து ஹாங்காங் பெரும்பாலான பயணிகள் விமானங்களை வியாழக்கிழமை வரை நிறுத்தி வைத்துள்ளது.
மக்கள் பீதியடைந்து பொருட்களை வாங்குவதை தொடங்கியதால் பல்பொருள் அங்காடிகளில் குவிந்தனர், மேலும் கடைகள் இரண்டு நாட்களுக்கு மூடப்படலாம் என்ற அச்சத்தில் குடியிருப்பாளர்கள் அத்தியாவசிய பொருட்களை சேமித்து வைத்துள்ளனர்.
நகரம் முழுவதும் உள்ள வீடுகள் மற்றும் வணிகங்களில் ஜன்னல்கள் கடினமான பொருட்கள் கொண்டு இறுக்கி மூடப்பட்டுள்ளன. கண்ணாடியின் தாக்கத்தையும் குறைக்க இது உதவும் என்று குடியிருப்பாளர்கள் நம்புகின்றனர்.
மணிக்கு 220 கிமீ (137 மைல்) வேகத்தில் சூறாவளி காற்று வீசும் ரகசா, குவாங்டாங் கடற்கரைக்கு “கடுமையான அச்சுறுத்தலை” ஏற்படுத்துவதாக ஹாங்காங் ஆய்வகம் தெரிவித்துள்ளது.
குவாங்டாங் கடற்கரையை நெருங்கும்போதும் ஹாங்காங், சீனா மற்றும் தைவானையும் பாதிக்கும் இது நாளை புதன்கிழமை நண்பகல் முதல் பிற்பகல் வரை குவாங்டாங்கின் கடற்கரையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குவாங்டாங் அதிகாரிகள் 770,000 க்கும் மேற்பட்ட மக்களை வெளியேற்றியுள்ளனர், இன்று செவ்வாய்க்கிழமை மாகாணம் முழுவதும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங்கின் கடலோரப் பகுதிகளில் நீர் மட்டம் சுமார் இரண்டு மீட்டர் (ஆறு அடி) உயரும், மேலும் சில பகுதிகளில் அதிகபட்ச நீர் மட்டம் நான்கு முதல் ஐந்து மீட்டர் (12-15 அடி) வரை உயரக்கூடும் என்று கண்காணிப்பு மையம் கூறியது, குடியிருப்பாளர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தியது.
தாழ்வான பகுதிகளில் உள்ள தங்கள் வீடுகளை வலுப்படுத்த உள்ளூர் அதிகாரிகள் மணல் மூட்டைகளை வழங்கி வைத்துள்ளனர்.