யோஷித ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்னிலையாகிறார்

நிதிமோசடி குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோசித்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை மீண்டும் நீதிமன்றில் பிரசன்னப்படுத்தப்படவுள்ளார்.

பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம் சனிக்கிழமை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யோஷித்த ராஜபக்ஷ பின்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டு 4 மணித்தியால வாக்குமூல பதிவின் பின்னர் கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இந்தநிலையில், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, யோஷித ராஜபக்ஷ கைது செய்யப்பட்டதில் ஜனாதிபதியோ அல்லது பாதுகாப்பு அமைச்சரோ எந்த தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்