யேமனில் படகு விபத்து – 68இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

யேமன் கடற்பகுதியில் சுமார் 150 பேரை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து மூழ்கியதில் 65இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளனர்.

10 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஏனையவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது .

அவர்களில் பலர் எத்தியோப்பிய நாட்டினர் என நம்பப்படுவதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் நேற்று இந்த விபத்து இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

வளைகுடா அரபு நாடுகளில் வேலை தேடி ஆப்பிரிக்காவிலிருந்து குடியேறுபவர்களுக்கு ஏமன் ஒரு முக்கிய பாதையாக உள்ளது, கடந்த சில மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் இறந்துள்ளதுடன் பலர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச இடம்பெயர்வு அமைப்பு நடத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.