யூடியூப் செயலியில் உலகளாவிய ரீதியில் தொழில்நுட்ப செயலிழப்பு
யூடியூப் செயலியில் உலகளாவிய ரீதியில் தொழில்நுட்ப செயலிழப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகெங்கிலும் உள்ள பயனர்கள், யூடியூப் செயலியைப் பயன்படுத்தும் போது “சம்திங் வென்ட் ராங்” (Something went wrong) என்ற செய்தியை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தத் தொழில்நுட்ப செயலிழப்புக்கான காரணம் குறித்த மேலதிக விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
