
யூடியூப்பில் பொய் வதந்திகள்: நீதிமன்றத்தால் ஒருவருக்கு தண்டனை
யூடியூப் சேனல் மூலம் பெண்கள் குறித்து தவறான மற்றும் வெளிப்படையான வதந்திகளைப் பரப்பியதற்காக குற்றத்தை ஒப்புக்கொண்ட ஒருவருக்கு 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கடுவெலவைச் சேர்ந்த நபர் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி இந்த தீர்ப்பை வழங்கினார்.
குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) சைபர் கிரைம் பிரிவு அவருக்கு எதிராக தாக்கல் செய்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கொழும்பைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் தாக்கல் செய்த புகாரின் பேரில் விசாரணைகளை நடத்திய பின்னர் சிஐடி இந்த வழக்கைத் தாக்கல் செய்தது.
தனது புகாரில், யூடியூப்பில் தவறான தகவல்களைப் பரப்ப தனது புகைப்படம் பயன்படுத்தப்படுவதாக ஆசிரியை தெரிவித்திருந்தார்.
சந்தேக நபருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுகளின் கீழ் சிஐடியினர் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
