யுவன் இசையில் ‘கனகா’ பாடல் வெளியீடு

 

தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் திரைப்படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன்.

இவர் தற்போது ‘நொன் வயலன்ஸ் (NON Violence) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இத்திரைப்படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்தநிலையில், நொன் வயலன்ஸ் படத்திலிருந்து நடிகை ஸ்ரேயா நடனமாடியுள்ள ‘கனகா’ பாடலின் லிரிக்கல் காணொளி வெளியாகியுள்ளது.

திருமணம் ஆனதில் இருந்து தமிழில் நடிப்பதை குறைத்துகொண்ட ஸ்ரேயா, இந்தாண்டு வெளியான ரெட்ரோ திரைப்படத்தில் பாடல் ஒன்றுக்கு சிறப்பு நடனம் ஆடி கம்பேக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.