
யுனெஸ்கோவிலிருந்து அமெரிக்கா விலகியது
யுனெஸ்கோவின் உறுப்புரிமையிலுருந்து விலகுவதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் கலாசார , கல்வி முகவரகம், இஸ்ரேல் மீதான அதன் சார்பு மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதன் காரணமாக விலகுவதாகஎடுத்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது .
யுனெஸ்கோவின் தொடர்ச்சியான ஈடுபாடு அமெரிக்காவின் தேசிய நலன்களைப் பூர்த்தி செய்யவில்லை என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் தெரிவித்துள்ளார் .
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த 2017 ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாசார அமைப்பிலிருந்து விலகுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இருப்பினும், பின்னர் அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜோ பைடன், அந்த உறுப்புரிமையை மீண்டும் நிலைநாட்ட நடவடிக்கை எடுத்தார்.
