
“யுத்த வரலாற்று” கவிதை நூல் வெளியீடு
-மூதூர் நிருபர்-
யுத்தத்தின்போது பட்ட அவஷ்தைகள் தொடர்பாக சம்பூரைச் சேர்ந்த இளம் கவிஞர் பா.பிரியங்கன் எழுதிய “அகாலத்தின் குரல்” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றது.
சம்பூர் தமிழ்க் கலாமன்றத்தின் ஒழுங்கமைப்பில் இவ் நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.
இவ் கவிதை நூலானது யுத்தத்தின் வடுக்கல்,வேதனை,இழப்புக்கள்,அனுபவங்கள் என பல விடயங்களை கொண்டதாக அமைந்துள்ளது.
இந் நிகழ்வில் திருகோணமலை மறை மாவட்ட ஆயர் நோயல் இம்மானுவேல், கிழக்கு பல்கலைகழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கிருபராஜ் ராஜரெட்ணம் ,சிரேஷ்ட சட்டத்தரணி இ.திருக்குமரநாதன் ,தமிழ் தேசிய இலக்கியப் பேரவையின் தலைவர் திரு.தீபச்செல்வன், ஐபீசி பாஸ்கரன் கந்தையை,இலக்கிய ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.