யுத்தம்-யானை தாக்குதலில் வீட்டை இழந்த பல்கலைக்கழக மாணவியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கித்துள் கிராமத்தில் யுத்தம் காரணமாக தனது உறவுகளை இழந்து, யானைகளின் தாக்குதலில் வீட்டை இழந்து மிகவும் வறுமைக் மத்தியில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவியின் குடும்பத்திற்கு லண்டன் ஈழப் பதீஸ்வரர் ஆலயத்தின் ஊடாக வீடு கையளிக்கப்பட்டது.

ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய லண்டன் ஈழப் பதீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் ஜெயதேவன் உடனடியாக செயற்பட்டு மட்டக்களப்பு இணைப்பாளர்களான ஆனந்தராஜா, அனோஜன் ஆகியோரின் முயற்சியில் குறித்த குடும்பத்திற்கான குளியலறை, மலசலகூடம், மின்சார வசதிகளுடன் கூடிய வீடு புனரமைப்பு செய்யப்படு கையளிக்கப்பட்டது.

அத்துடன், குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக கோழி வளர்ப்பிற்கான கோழி கூடு ஒன்றும் நிர்மானித்து கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வீடு கையளிக்கும் நிகழ்வில் ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ நிலாந்தன், பெரிய புல்லுமலை கித்தூள் வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவானந்தன், ஈழப் பதீஸ்வரர் ஆலயத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களான ஆனந்தராசா, அனோஜன், ஆகியோர் கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்தனர்.

வேண்டுகோளுக்கிணங்க எந்த வித மறுப்பும் தெரிவிக்காது குறித்த வீட்டை புனரமைத்து கொடுக்கப்பட்ட்து. அதேவேளை குடும்ப வாழ்வாதாரத்திற்கும் கல்வி செலவுகளை ஏற்படுத்தி கொடுத்த லண்டன் ஈழப் பதீஸ்வரர் ஆலயத்தின் தலைவருக்கும் மாவட்ட இணைப்பாளர்களுக்கும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்கர் தனது நன்றிகளை தெரிவித்தார்.

வீட்டை பெற்றுக் கொண்ட குடும்பம் சார்பாக பல்கலைக்கழக மாணவி தனது நன்றிகளை தெரிவித்தார்.