யுக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமான தாக்குதல்

யுக்ரைன் மீது ரஷ்யா ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

குறித்த தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன், 25 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்கிவ் பகுதியில் உள்ள இராணுவ வைத்தியசாலை, அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட இடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யுக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.