யாழ்.வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கு புதிய அதிபர் நியமனம்!
-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் புதிய அதிபராக சிவஞானபோதம் தனஞ்சயன் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் குறித்த பாடசாலையில் கடந்த காலங்களில் ஆசிரியர், பிரதி அதிபர், அதிபர் ஆகிய பதவிகளை வகித்து, பின்னர் வெளி மாவட்டத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்றார். அதன்பின்னர் யாழ்.இந்துக் கல்லூரியின் பிரதி அதிபராக கடமை புரிந்தார்.
இவ்வாறான பின்னணியில் மீண்டு வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் அதிபராக நியமிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் ஒழுக்கம், கல்வி ஆகியவற்றின் வளர்ச்சிக்கு இவர் கடந்த காலங்களில் அளப்பரிய பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.


