-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணத்தில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த ஹையேஸ் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்தினை ஏற்படுத்திய சம்பவம் இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டை – மாவடி சந்தி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மூளாய் பக்கத்தில் இருந்து வந்த குறித்த ஹையேஸ் வாகனம் மாவடி சந்தி ஊடாக சித்தங்கேணி நோக்கி பயணிப்பதற்கு திரும்பியுள்ளது.
இதன்போது கட்டுப்படுத்த முடியாத வேகம் காரணமாக சித்தங்கேணி பக்கம் திரும்பிய வாகனம் வலது பக்கத்துக்கு மாறி வீதியோரத்தில் இருந்த தூண் மற்றும் வேலி மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் உயிர் சேதங்கள் எவையும் ஏற்படாவிட்டாலும் தூண், வேலி மற்றும் ஹையேஸ் வாகனம் என்பன கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
விபத்து சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


