யாழ்.வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா!
யாழ்ப்பாணம் – வடமராட்சி வல்லிபுரத்து ஆழ்வார் ஆலய தேர் திருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது.
கணபதீஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்களால் கிரியைகள் நிகழ்த்தப்பட்டன.
காலை 7:30 மணியளவில் வசந்த மண்டப பூசைகள் இடம்பெற்றதனை தொடர்ந்து சரியாக 9:30 மணியளவில் வல்லிபுரத்து ஆழ்வார் தேரிலேறி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இன்றைய தேரத்திருவிழாவில் அடியவர்கள் அங்க பிரதிஷ்டை, பால் காவடி, செடில்காவடி, துக்கு காவடி, கற்பூரச்சட்டி என பல்வேறு வகையில் நேறறிக்கடன்களை நிறைவேற்றினர்.
இந்த தேர் திருவிழாவில் நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வல்லிபுரத்து ஆழ்வாரை தரிசித்தனர்.
பக்தர்களுக்கான போக்குவரத்து ஒழுங்குகளை இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் போக்குவரத்து சங்கம் என்பன மேற்கொண்டிருந்தனர்.
மக்களுக்கான பாதுகாப்பு ஒழுங்குகளை காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் தலமையில், பருத்தித்துறை உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரின் கண்காணிப்பின் கீழுள்ள பொலிஸ் குழுவினர் நெறிப்படுத்தினர்.