யாழ் மாவட்டத்தில் விஜயதசமி உற்சவம்
நவராத்திரியின் விரதத்தின் இறுதிநாளான விஜயதசமி உற்சவம் இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன், விஷ்ணு ஆலயங்களில் காலை, மாலை உற்சவங்களாக இடம்பெறுகின்றது.
அந்தவகையில் தெல்லிப்பளை தோதரை அம்மன் விஜயதசமியின் மானம்பூ உற்சவம் காலை பக்திபூர்வமாக இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சி.பாக்கியசிங்கராஜா தலைமையிலான சிவாச்சாரியர்கள் இந்த அபிஷேக ஆராதனை மானம்பூ உற்சவத்தினை நடாத்திவைத்தனர்.
இவ் விஜயதசமியில் அன்று பல ஆலயங்களில் சமய, மற்றும் ஏடுதொடக்கும் நிகழ்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
-யாழ் நிருபர்-
செய்திகள் மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை அறிய தினமும் Minnal24.com பார்க்கவும்
எமது குழுவில் இணைய கீழே உள்ள Join Whatsapp Group ஐ அழுத்தவும்
