
ஆவணி சதுர்த்தி விநாயகர் விரத உற்சவம்
-யாழ் நிருபர்-
ஆவணி சதுர்த்தி விநாயகர் விரத உற்சவம் யாழ். மாவட்டத்திலுள்ள ஆலயங்களில் சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.
இந்து சமயத்தவர்களினால் அனுஸ்டிக்கப்படும் முக்கிய விரதங்களின் ஒன்றான விநாயகர் சதுர்த்தி விரத உற்சவம் இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள அனைத்து விநாயகர் ஆலயங்களில் மிகச்சிறப்பான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.
இவ் விநாயகர் சதுர்த்தி விரத உற்சவத்தினை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க இணுவில் திருப்பதி அருள் மிகு ஸ்ரீ வேங்கடேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பான முறையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
இவ் உற்சவ கிரியைகளை ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சி.விக்கினேஸ்வரக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியர்கள் இவ் கிரியை அபிசேக ஆராதணைகளை நடாத்திவைத்தனர்.
இதில் பக்தர்கள் பலரும் கலந்துகொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச்சென்றனர்.
