
யாழ்.மாவட்டத்தின் மிகப்பெரிய சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டது
யாழ்.மாவட்டத்தின் மிகப்பெரிய சிறுவர் பூங்கா யாழ்ப்பாணம் இந்து கல்லூரி கல்லூரி பழைய மாணவன் குருபரனினால் திறந்து வைக்கப்பட்டது.
எமது சுயசார்பு பொருளாதார மேம்பாடுத்துவதுடன் அதனோடிணைந்த வேலை வாய்ப்புக்களை வழங்கும் நோக்குடன் யாழ்ப்பாணம் வலிகாமம் இளவாலையில் பகுதியில் யாழ்.ஏய்ட் நிறுவனத்தினரால் அமைக்கப்பட்டு வரும் நட்பு மண் என்னும் பெயருடைய பண்ணையில் சிறுவர்கள் மகிழ்ந்து விளையாட்டுவதற்கு ஏதுவான வகையில் இயற்கையுடன் அமையப் பெற்ற யாழ்.மாவட்டத்தின் மிகப்பெரிய சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அமரர் சண்முகநாதன் தேசிகனின் ஞாபகார்த்தமாக அன்னாரின் சகோதரனும் யாழ். இந்துக் கல்லூரியின் 95 ஆம் ஆண்டு மாணவனுமான சண்முகநாதன் குருபரனின் (குரு)நிதி அனுசரணையுடன் நிர்மானிக்கப்பட்ட குறித்த பூங்காவானது குருவின் குடுப்பத்தினரால் திறந்து வைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்






