யாழ்.மறவன்புலவில் 29 ஜெலட் நைட் குச்சிகள் மீட்பு!

 

-யாழ் நிருபர்-

 

யாழ். தென்மராட்சி மறவன்புலவு காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 29 ஜெலட்  நைட் குச்சிகள் மீட்க்கப்பட்டுள்ளன.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 5 மணியளவில் இந்த ஜெலட் நைட் குச்சிகள் மீட்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட குச்சிகள் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் கொண்டு வருகின்றனர்.