யாழ் போதனா வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சைகள் ஆரம்பம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், இன்று முதல் கண் சத்திர சிகிச்சைகள் ஆரம்பமாகவுள்ளதாக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2 வருடங்களாக சத்திர சிகிச்சை நிபுணர் இல்லாத காரணத்தினாலும் சத்திர சிகிச்சைக்கு தேவையான பொருட்கள் இல்லாத காரணத்தினாலும் குறித்த சத்திர சிகிச்சையானது முன்னெடுக்கப்பட்டவில்லை. இந்நிலையில் தற்போது கண் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவர் பதவியேற்றதன் காரணமாக, இன்று முதல் யாழ்ப்பாண வைத்தியசாலையில்,  கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.