யாழ். பொலிஸ் அத்தியட்சகரின் ஏற்பாட்டில் சிறப்பு பூஜை வழிபாடுகள்
-யாழ் நிருபர்-
தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்றையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் முனியப்பர் கோயிலில் சிறப்பு பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூசன் சூரியபண்டார அவர்களது ஏற்பாட்டின் கீழ் இந்த பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த பூஜை வழிபாடுகளில் பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்