யாழ். பேருந்து நிலையத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை

வடக்கில் அதிகளவான பயணிகளினால் பயன்படுத்தப்படும் யாழ்ப்பாண பேருந்து நிலையத்தில் பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் முதற்கட்டமாக பாலூட்டும் தாய்மார்களுக்காக ஓய்வறை அண்மையில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில் நாளொன்றுக்கு அதிகளவான பயணிகளினால் பயன்படுத்தப்பட்டுவரும் பேருந்து நிலையம் இதுவெனவும் இங்கு வசதிகள் குறைவாக உள்ளதால் மக்கள் அதிகம் அசௌகரியங்களை எதிர் நோக்குகிறார்கள் எனவும் அவற்றை நிவர்த்தி செய்யும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அபிவிருத்தி திட்டத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு முக்கியத்துவம் வழங்கியே முதலில் இந்த ஓய்வறையை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்