யாழ் பல்கலைக்கழக மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று வியாழக்கிழமை சடலாமாக மீட்கப்பட்டுள்ளார்.

யாழ் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச் சேர்ந்த இரண்டாம் வருட மாணவி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவர்.

முகாமைத்துவ பீடத்தில் கற்கும் அமிர்தநாயகம் மரியலக்சிகா (வயது-22) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றின் அறையில் வாடகைக்குக் குடியிருந்துள்ளார். இந்த மாணவி இன்று காலை விரிவுரைகளுக்குச் செல்லாமல் தனித்திருந்ததாகவும், சக மாணவிகள் நண்பகல் அளவில் அறைக்குத் திரும்பி வந்த வேளையில் மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.