யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
-யாழ் நிருபர்-
நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அமுலாக்கப்பட்ட ஊரடங்கு வேளையில் யாழ்.பல்கலை மாணவர்களுக்கான உணவுப் பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
இவ் அத்தியாவசிய உதவியானது, புலம்பெயர் தேசத்தவர்களான கீதன் சர்மிளா குடும்பம் மற்றும் சசிகரன் ஜீவிதா குடும்பத்தால் வழங்கப்பட்ட பணத்தில் முதற்கட்டமாக வழங்கி வைக்கப்பட்டது.
அத்துடன், எதிர்காலத்திலும் மாணவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு அவர்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.