யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் அனைத்துலக நாடக விழா

 

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா நேற்று புதன் கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.

அனைத்துலக நாடக விழாவில் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களின் நாடகங்கள் மற்றும் தொழில்வாண்மை நாடகக் கலைஞர்களின் நாடகங்களும் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.