யாழ்.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் 8 தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்த மாணவி!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவானது இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.

இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்தை சேர்ந்த நற்குணம் அபிராமி என்ற மாணவி 8 தங்கப் பதக்கங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக வரலாற்றில் மருத்துவ பீடத்திலிருந்து ஒருவரே எட்டு தங்க பதங்கங்களை பெற்ற இந்த விடயமானது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

குறித்த மாணவிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.