யாழ் நவாலியில் வெடிபொருள்கள் கண்டுபிடிப்பு

மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருள்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காணி ஒன்றை பண்படுத்திய போது இந்த வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

தகவல் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இன்றைய தினம் (03) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் வெடிபொருள்கள் விசேட அதிரடிப் படையினரால் அகற்றப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் .

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.