யாழ். நல்லூரில் பெண்கள் மீது தாக்குதல் : ஆலயத்தில் சலசலப்பு (வீடியோ இணைப்பு)

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய கைலாசவாகன திருவிழா சுவாமி வீதியுலா முடிந்து வசந்தமண்டபத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை போகும் போது வசந்தமண்டபத்திற்கு முன்பாக சுவாமி கும்பிடுவதற்காக காத்திருந்தந்த பெண்களை விலகிப் போகவில்லை என்று சிவப்புச் சால்வை கட்டிய நபர் ஒருவர் தாக்கியுள்ளார்.
இதனால் வசந்தமண்டபத்திற்கு முன்பாக முறுகல் நிலை ஏற்பட்டது. தாக்குதலை நடாத்திய நபரை பாதிக்கப்பட்ட பெண்களும் அங்கிருந்தவர்களும் எச்சரித்தாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
புதிதாக சிவப்பு சால்வை கட்டிக்கொண்டு நல்லூரில் சுற்றித்திரிபவர்கள் சிலர் அராஜகமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. ஒலிவாங்கியால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
எனவே இந்த பிரச்சினையை ஆலய நிர்வாகம் தீர்க்க வேண்டும் எனவும் தீர்க்க தவறும் பட்சத்தில் பக்தர்களுக்கும் அவர்களுக்குமிடையே வீண் முரண்பாடுகள் ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.