யாழ் நகர் பகுதியில் விசேட டெங்கு ஒழிப்பு

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பிரிவிற்குட்பட்ட கொட்டடி கிராமத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண நகர் பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையில் கிராம சேவை உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து கொட்டடி பகுதியில் வீடு வீடாக விசேட டெங்கு தரிசிப்புகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 80 ற்கும் மேற்பட்ட வீடுகள் தரிசிப்பு செய்யப்பட்டது. டெங்கு நுளம்பு பெருகுவதற்கு ஏதுவாக வளவினை வைத்திருந்த 12 பேரிற்கு சிவப்பு அறிவித்தல்கள் வழங்கப்பட்டது. அத்துடன் வீட்டுவளவுகளில் டெங்கு நுளம்பு குடம்பிகளை வைத்திருந்த 8 பேரிற்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதற்கு பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவனால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்