யாழ். செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் நாளையுடன் நிறைவு
யாழ்.செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள்
நாளையுடன் நிறைவடைகிறது .
மனித புதைகுழி அகழ்வுக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட 45 நாள்கள் கால அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ள நிலையில், இன்றும் அகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன .
இதேநேரம் சித்துப்பாத்தி வளாகத்தில் ஜி.பி.ஆர் ஸ்கேனர் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில், அகழ்வுகளை மேற்கொள்வதற்கு மேலும் 08 வாரங்கள் கால அவகாசம் தேவை என முன்னர் நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து யாழ் நீதவான் நீதிமன்றம் அகழ்வை மேற்கொள்ள வரவு -செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணியில் ஈடுபட்டுள்ள நிபுணர்கள் குழுவால் தயாரிக்கப்பட்ட வரவு -செலவுத் திட்டம் ஓரிரு தினங்களில் நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் எனப் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 235 மனித என்புகூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன .
