யாழ். செம்மணியில் இன்றும் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படுகிறது
யாழ். செம்மணி – சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இன்றும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன .
சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் நேற்றைய அகழ்வின்போது, 3 மண்டையோட்டுத் தொகுதிகள், குவியலாக ஒரே இடத்தில் காணப்பட்டதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் 41 ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன.
சித்துப்பாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 218 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன .. அவற்றில் 198 என்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜ் முன்னிலையில், தொல்லியல்துறை பேராசிரியர் ராஜ் சேமதேவாவின் நெறிப்படுத்தலுடன், யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் பங்கேற்புடன் மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
