யாழ் சிறைச்சாலை கைதி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்