யாழ்.சிறைச்சாலையில் பெண் கைதி துன்புறுத்தல் : மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் துன்புறுத்தலுக்குள்ளாகி வருவதாக மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கைதியின் உறவினர்கள் இந்த முறைப்பாட்டினை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கைதியை பார்வையிட நேற்று வியாழக்கிழமை சென்ற போது,  சிறைக்காவலர்கள் தன்னை துன்புறுத்துவதாக தம்மிடம் கூறியதாக அந்த  முறைப்பாட்டில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த  முறைப்பாடு தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.